சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 376 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து 113, ஜெய்ஸ்வால் 56, ஜடேஜா 86 ரன்கள் குவித்து அசத்தினர்.
வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் சுமாராக பேட்டிங் செய்து 149 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா விக்கெட்டுகளை எடுத்தார்.
ரிஷப் பண்ட் சேட்டை:
அதன் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டானார்கள். அதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – சுப்மன் கில் ஆகியோர் நிதானமாக பேட்டிங் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் சுப்மன் கில் முதலாவதாக அரை சதமடித்து இந்தியாவின் முன்னிலையை அதிகரித்தார். அவருடன் எதிர்புறம் சேர்ந்து கொஞ்சம் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்தார்.
அந்த வகையில் 3வது நாளில் சிறப்பாக பேட்டிங் செய்த அந்த ஜோடி வங்கதேசத்திற்கு பெரிய சவாலை கொடுத்தது. அவர்களை பிரிக்க முடியாமல் திகைத்து நின்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ செய்வதறியாது ஃபீல்டிங்கை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது 2019 உலகக் கோப்பையில் தோனி செய்ததைப் போலவே”பாய் ஒரு ஃபீல்டரை இங்கே நிறுத்துங்கள்” என்று ரிஷப் பண்ட் சொன்னார்.
சுப்மன் கில் அசத்தல்:
அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு வங்கதேச கேப்டனும் ரிசப் பண்ட் சொன்ன இடத்தில் ஒரு ஃபீல்டரை நிறுத்தியது வர்ணனையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 3வது நாள் உணவு இடைவெளி வரை விக்கெட்டை இழக்காமல் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள அந்த ஜோடியில் ரிஷப் பண்ட் 82*, சுப்மன் கில் 86* ரன்களுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: இஷான் கிஷன் சதமடித்து இருந்தாலும் சஞ்சு சாம்சனுக்கு தான் அந்த வாய்ப்பு போகுமாம் – வெளியான தகவல்
தற்சமயத்தில் 205-3 ரன்களுடன் இருக்கும் இந்தியா மொத்தம் 432 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் இந்தியா வின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் இதுவரை அடித்த 3 சிக்ஸர்களை சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் 100 சிக்சர்கள் அடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரிஷப் பண்ட்: 24 வருடம் 271 நாட்கள்
2. சச்சின் டெண்டுல்கர்: 25 வருடம்
3. சுப்மன் கில்: 25 வருடம் 13 நாட்கள்*
4. சுரேஷ் ரெய்னா: 25 வருடம் 77 நாட்கள்



