மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய அதிரடி வீரர். முதல் போட்டிக்கான அணியின் யாரை தேர்வு செய்வது – அணியில் குழப்பம்

Pant-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறும் என்பதால் இரு அணிகளும் தற்போது தொடருக்காக தயாராகி வருகின்றனர். இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது. அதில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த மூன்று நாள் பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்கள் மட்டுமே அடித்தது.

INDvsAUS

பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் போல் இல்லாமல் சிறப்பாக விளையாட இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 386 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அகர்வால் 60, கில் 65 ரன்களும், விகாரி 104 ரன்களும், ரிஷப் பண்ட் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 83 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் ஒரு கட்டத்தில் 62 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இருந்தார். நேற்றைய ஆட்டம் முடிய 2 ஓவர்கள் மட்டும் இருந்த நிலையில் 29 ரன்களை அவர் அதிரடியாக குறித்து 73 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 103 ரன்கள் என அதிரடியாக சதத்தை கடைசி ஓவரில் நிறைவு செய்தார்.

Pant

மேலும் கடைசி ஓவரில் மட்டும் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை தொடர்ச்சியாக விளாசி அவர் அதிரடியான சதத்தை பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நீண்ட நாட்களாக பார்மில் இல்லாத ரிஷப் பண்ட் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஒருநாள் டி20 போட்டியில் இடம்பெறாமல் இருந்த அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். கூடவே விருத்திமான் சஹாவும் இடம்பெற்றுள்ளதால் இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.

Pant 1

மேலும் சஹா ஐபிஎல் தொடரின்போது சிறப்பாக விளையாடினார். ஆனால் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். அதே வகையில் ஐபிஎல் போட்டியின் போது பண்ட் சரியாக விளையாடவில்லை இருந்தாலும் பயிற்சி போட்டியில் தன்னை நிரூபித்துள்ளார். இதனால் யாருக்கு இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் அணிக்குள் குழப்பம் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement