- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துலீப் டிராபி போட்டியில் வெறியாட்டம் ஆடிய ரிஷப் பண்ட்.. வங்கதேச அணிக்கெதிரான டீமுக்குள்ள வந்துட்டாரு

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்தியாவில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார். நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்டுக்கு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.

அதிரடியில் அசத்திய ரிஷப் பண்ட் :

அதனை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெற்ற அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய பின்னர் தற்போது நிலையான இடத்தை பிடிக்க வேண்டுமெனில் உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேல் அறிமுகமாகிவிட்டார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் தனது நிலையை உறுதி செய்ய உள்ளூர் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தாலும் இரண்டாவது இன்னிங்சில் மிக சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதாவது இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 34 பந்துகளை சந்தித்த அவர் அதிரடியான அரை சதத்தை விளாசினார். இந்த அரைசதமனாது உள்ளூர் தொடரில் அவர் அடிக்கும் 20-வது அரை சதமாகவும் பதிவானது.

இதையும் படிங்க : சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் நெகிழ்ந்து போன கே.எல் ராகுல் – நடந்தது என்ன?

மேலும் இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 47 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸ் மற்றும் 9 பவுண்டரி என 61 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்க உள்ள வேளையில் அவரது இந்த அதிரடியான ஆட்டம் மீண்டும் அவரது இடத்தை இந்திய அணியில் உறுதி செய்துள்ளது.

- Advertisement -