ஆஸி அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – விவரம் இதோ

Ind-2

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விக்கெட் கீப்பரான பண்ட் விலகியுள்ளார்.

ஏனெனில் மும்பையில் நடந்த முதல் போட்டியின்போது கம்மின்ஸ் வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு ஹெல்மெட்டில் தாக்கியது. இதனால் அவர் மூளையில் சிறிய அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதால் அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Pant 1

மேலும் அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பண்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவரது முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்பதனை பொருத்தே அவர் இந்த தொடரின் இறுதி போட்டியில் பங்கேற்பாரா ? என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -