பண்ட் இடத்திற்கு இருக்கும் ஆப்பு. இனிமேல் அவர் ஒழுங்கா ஆடனும் – விவரம் இதோ

Pant
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

Pant

- Advertisement -

இந்தத் தொடர் முழுவதும் டோனிக்கு பதிலாக பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே அவரின் மீது உள்ள எதிர்பார்ப்பும் இந்த தொடரில் ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது. இந்நிலையில் தோனியின் இடத்தை அவ்வளவு சுலபமாக அவரால் நிரப்ப முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏனெனில் தோனியின் நிலையான பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங் திறனும் பல வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். பண்ட் அதனை செய்ய சற்று தடுமாறி வருவதையும் நாம் பார்க்கிறோம். பேட்டிங்கில் அதிரடியாக வருவதும் போவதுமாக இருக்கும் பண்ட் கீப்பிங்கிலும் அவ்வப்போது தவறுகளை செய்து வருகிறார்.

samson

எனவே இந்தத் தொடர் அவருக்கு ஒரு மிகப்பெரிய சோதனையாக அமையும். ஏனெனில் இந்த தொடரில் அவர் சொதப்பும் பட்சத்தில் அடுத்து அணியின் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ராகுல் போன்ற விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பண்ட்.

Advertisement