அவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..!இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..!

Rishab
- Advertisement -

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்த நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. 

இந்த போட்டியில் 11 கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட் அதிக ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த ஜேக் ரஸ்ஸல் மற்றும் டிவில்லியர்ஸின்  சாதனைகளை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு ரிஷாப் பன்ட் அளித்துள்ள பேட்டியில், தோனியின் பாதிப்புதான் இதற்கு காரணம். அவர் இந்திய நாட்டின் ஹீரோ. அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் அருகில் இருந்தால் அதிக நம்பிக்கையுடன் இருப்பேன். கிரிக்கெட் தொடர்பாக ஏதாவது சந்தேகம், பிரச்னை என்றால் உடனடியாக அவரிடம் சொல்வேன். நிவர்த்தியாகிவிடும்

விக்கெட் கீப்பராகவும் வீரராகவும் அவர்தான், அழுத்தமான சூழல்களில் பொறுமையாக ஆடுவதைக் கற்றுக்கொடுத்தவர். அமைதியாக இருந்து, ஆட்டத்தில் கவனம் செலுத்தி நூறு சதவிகித ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். 11 கேட்ச் பிடித்ததை ரெக்கார்ட் என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. எப்போதும் சாதனைகளை பற்றி அதிகம் யோசிப்பதில்லை என்று கூறியுள்ளார். 

Advertisement