இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரை கைப்பற்றுவதற்கு இரு அணியும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.
மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் இழந்தார். இதன் பிறகு புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர்.
கடந்த நான்கு இன்னிஸ்சில் சொதப்பிய ஸ்மித் தற்போது விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடி 131 குவித்துள்ளார். இதன்மூலம் ஆஸதிரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 10 விக்கெட் இழந்து 338 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் ஜடேஜா 4 கிரிக்கெட்டையும் நவதீப் சைனி 2 விக்கெட்டும் பும்ரா 2 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
இந்த போட்டியில் 4 விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் புகோவ்ஸ்கியின் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார். அஸ்வின் மற்றும் சிராஜ் வீசிய ஓவரில் புகோவ்ஸ்கி 2 கேட்சிகளை கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட் இந்த இரண்டு கேட்ச்களையும் நழுவவிட்டார். அதைபோலவே பும்ராவும் புகோவ்ஸ்கியின் ரன் அவுட்டை தவறவிட காரணமாக இருந்திருக்கிறார்.
இதன் காரணம் காரணமாகவே புகோவ்ஸ்கி அரை சதம் (62) விளாசியுள்ளார். ரிஷப் பண்ட்டின் இந்த மோசமான ஆட்டத்திற்கு அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்ட்டை கடுமையாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.