இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இந்தப் போட்டியையும் சேர்த்து 7வது முறையாக சதத்தை படித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சாதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் (7) வாழ்நாள் சாதனையை உடைத்து அவர் புதிய வரலாறு படைத்தார்.
குட்டிக் கரண கொண்டாட்டம்:
அந்த வரலாற்று சதத்தை அடித்த பின் களத்தில் குட்டிக்கரணம் அடித்து ரிஷப் பண்ட் வித்தியாசமாக கொண்டாடினார். ஆரம்பக் காலங்களில் வழக்கமாக கொண்டாடி வந்த சமீபத்திய போட்டிகளில் சதத்தை அடிக்கும் போது இப்படி குட்டிக்கரணம் அடித்து கொண்டாடுகிறார். குறிப்பாக விபத்திலிருந்து உயிர் தப்பி மீண்டும் விளையாடும் அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சதத்தை அடித்த போது முதல் முறையாக அப்படி கொண்டாடினார்.
இந்நிலையில் சதத்தை அடித்தால் 3 விதமாக கொண்டாடுவதற்கு முடிவு செய்து வைத்திருந்ததாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அதில் தன்னுடைய பள்ளியில் படிக்கும் போது ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் கலந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். எனவே அதை மறக்காமல் தற்போது சதமடிக்கும் போது கொண்டாடுவதாகவும் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
பண்ட் விளக்கம்:
அது பற்றி புஜாராவிடம் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது மனதில் 3 கொண்டாட்டங்களை வைத்திருந்தேன். அதில் ஒன்று “என்னுடைய பேட் பேசுகிறது” என்று சொல்வது போல இருக்கும். அதன் பின் என்னுடைய கொண்டாட்டத்தையே பின்பற்றலாம் என்று நினைத்தேன். இதை நான் என்னுடைய இளம் வயதிலிருந்தே செய்து வருகிறேன். பள்ளியில் படிக்கும் போது ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை எடுத்துள்ளேன்”
இதையும் படிங்க: இந்தியாவில் பண்ணத விட ஒருபடி மேல.. நிச்சயம் ஜெய்ஸ்வால் அதை செய்து காட்டுவார் – கவாஸ்கர் நம்பிக்கை
“பள்ளியில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் கலந்து கொண்டுள்ளேன். அதனால் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடு ராத்திரியில் எழுப்பி செய்யச் சொன்னாலும் நான் குட்டிக்கரணம் அடித்துக் காட்டுவேன். விபத்துக்குப் பின் அதைச் செய்வதற்கு நிறைய அதிகமான பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். அதன் காரணமாக தற்போது அதை மீண்டும் செய்வது எனக்கு எளிதாக இருக்கிறது” என்று கூறினார்.



