ஆஸ்திரேலிய தொடரில் பண்ட் விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – வெளியான தகவல் இதோ

Pant

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. நவம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் பாதிநாட்கள் வரை நடைபெறவுள்ள இந்த நீண்ட தொடரானது 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 என இரண்டு மாதங்கள் தங்கி விளையாட வேண்டி இருக்கிறது. இதற்கான அனைத்து விதமான அணிகளும் அறிவிக்கப்பட்டன. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்திலும் விஷயத்தில் கிட்டத்தட்ட 31 வீரர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். எப்போதும் இல்லாத வகையில் ஆஸ்திரேலியாவிற்கு இந்த மாதிரி தான் 31 வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்

INDvsAUS

இந்த அணியில் டெஸ்ட் வடிவத்தில் மட்டும் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருக்கிறார். கே.எல் ராகுல் மற்றும் ரித்திமான் சாஹா ஆகிய இருவரும் இவருக்கு போட்டியாக பார்க்கப்படுகிறார்கள். தற்போது டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரிஷப் பண்ட் பெரிதாக ஒரு அதிரடி ஆட்டத்தை காட்டவில்லை. அவரது அதிரடி ஆட்டமும் இயல்பாக இருக்க வில்லை.

மேலும் அவர் தனது உடல் தகுதியை இழந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் துவக்கம் முதலே ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்த அவர் திடீரென காயம் என்று கூறிக்கொண்டு வெளியே உட்கார்ந்து விட்டார். பல காணொளிகளில் அவர் ஓடுவதற்கு சற்று சிரமப் ட்டது தெரிந்ததே அவரது உடல் எடை கூடி கூடி விட்டது என அனைவரும் கூறி வருகின்றனர்.

pant

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதற்கு முன்னதாக உடற்தகுதி நிபுணர் குழு தேர்வாகியுள்ள அனைத்து வீரர்களின் உடல் தகுதியை அடையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அப்போது ரிஷப் பண்ட் உடல் எடை கூடிவிட்டது தெரிந்தால் ஆஸ்திரேலியாவிற்கு செல்வது அவருக்கு வாய்ப்புகள் குறைவு.

- Advertisement -

விராட் கோலியின் அணியில் எடை அதிகமாகவோ அல்லது ஓடுவதற்கு சிரமப்படும் ஒரு வீரர் கண்டிப்பாக இடம் பிடிக்க மாட்டார். அவர் எவ்வளவு திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் கண்டிப்பாக அவருக்கு அணியில் இடம் கிடைக்காது. அதற்குள் பண்ட் தனது உடல் தகுதியை சரி செய்தாக வேண்டும்.