குல்தீப் வீசிய சுழலை சரியாக பிடித்து மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த பண்ட் – வைரல் வீடியோ

Pant-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

toss

இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தான் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பெர்னாண்டோ விக்கெட்டை ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தினார். 11.3 ஓவரில் மெதுவாக வீசப்பட்ட அந்த பந்தை பெர்னாண்டோ ஏறி அடிக்க வந்து முயற்சித்தார். ஆனால் பந்து ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பர் பண்டிடம் சென்றது.

இந்த முறை சரியாக பந்தை பிடித்த பண்ட் மிக விரைவாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.இவரின் இந்த ஸ்டம்பிங் தோனியை அப்படியே நியாகப்படுத்தியது. இந்த ஸ்டம்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை அடித்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

- Advertisement -