Rishabh Pant : இங்கிலாந்து பறக்கிறார் பண்ட். ஆனால், அவர் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Pant
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Dhawan

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் கோலி, தோனி, பாண்டியா மற்றும் ராகுல் என அனைவருமே சிறப்பாக விளையாடி வருவதால் அடுத்தடுத்த போட்டிகளை காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கல் உண்டாகி உள்ளது. அது யாதெனில் கடந்த ஆஸ்திரேலியா போட்டியின்போது தவான் குல்டர் நைல் வீசிய பந்தில் பெருவிரலில் அடிபட்டார். அந்த காயம் தற்போது விரலில் வீக்கமடைந்து உள்ளதாகவும் அதற்காக இன்று தவானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பரிசோதனையில் தவானுக்கு மூன்று வாரம் ஓய்வு வேண்டும் என்று மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

Dhawan

இந்நிலையில் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் இந்திய அணி மாற்று வீரராக இங்கிலாந்து அனுப்பவுள்ளது. இன்று அல்லது நாளை பண்ட் இங்கிலாந்து சென்று அடைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இங்கிலாந்து அனுப்பினாலும் அவரை மாற்று வீரராக இன்னும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஏனெனில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிக்குப் பிறகு தவானின் காயம் மீண்டும் பரிசோதிக்கப்படும் அப்போது அவன் உடல் பகுதியில் தேர்ச்சி அடைந்தால் அவர் மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளது.

Rishab Pant

அதனால் பண்ட் இங்கிலாந்து சென்று அணியுடன் இணைந்து இருப்பார் ஆனால் அவரை அதிகாரப்பூர்வமாக விளையாட வைக்க எந்த ஒரு அறிவிப்பை இந்திய அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. மேலும் தவான் காயம் முற்றிலும் குணம் அடையாது என்ற முடிவு இருந்தால் பண்ட் விளையாடுவது உறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement