கொரோனாவில் இருந்து மீண்ட ரிஷப் பண்ட். எப்போது அணியில் இணைகிறார் தெரியுமா ? – விவரம் இதோ

Pant
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான முதன்மை இந்திய அணியானது கடந்த ஜூன் மாதத் துவக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி போட்டியை இழந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsENG 1

- Advertisement -

இதன் காரணமாக தற்போது அங்கேயே தங்கி இருக்கும் இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கெதிராக ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தொடங்கி செப்டம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் பெரிய தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்னர் ஒரு மாத கால இடைவெளி உள்ளதால் வீரர்கள் சில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ சில அறிவுரைகளுடன் கூடிய விடுமுறை அளித்தது.

அதன்படி வெளியே சென்ற வீரர்கள் தங்களது ஓய்வு நாட்களை விடுமுறையாக கழித்தனர். அப்படி வெளியே சென்ற இந்திய அணியின் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கால்பந்தாட்ட போட்டியை நேரில் காணச் சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

pant 1

அதன் பின்னர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இவர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்போது துர்ஹாமில் இருக்கும் இந்திய அணியுடன் விரைவில் அடுத்த பயிற்சியின் போது இன்னும் சில நாட்களில் அவர் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement