இந்தியாவின் வருங்காலமே ரிஷப் பண்ட் தான் – விமர்சனத்துக்கு மத்தியில் முன்னாள் வீரர் பெரிய ஆதரவு

Rishabh Pant
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முகமது சமி மற்றும் தீபக் சஹர் ஆகியோர் ஸ்டேண்ட் பை லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளதற்காக ஏற்பட்டுள்ள அதிருப்தியை விட காலம் காலமாக வாய்ப்புக்காக ஏங்கும் சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றிவிட்டு காலம் காலமாக டி20 கிரிக்கெட்டில் சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது கோபமடைய வைத்துள்ளது.

RIshabh Pant Fans

- Advertisement -

ஏனெனில் 2017இல் அறிமுகமான அவர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியால் முடியாத சாதனைகளை படைத்து சில சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்திய அவரை அடுத்த தலைமுறை முதன்மை விக்கெட் கீப்பராக உருவாக்க முயற்சிக்கும் அணி நிர்வாகம் எப்படி செயல்பட்டாலும் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து கொண்டே வருகிறது.

அதுவும் இதுவரை கடந்த 5 வருடங்களாக 58 என்ற அதிகப்படியான போட்டிகளில் வாய்ப்பை பெற்ற அவர் வெறும் 934 ரன்களை 23.95 என்ற சுமாரான சராசரியில் எடுத்து ஒரு முறை கூட ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாமல் விளையாடி வருகிறார். ஆனாலும் இளம் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதால் என்ன நடந்தாலும் வாய்ப்பு கொடுப்போம் என்ற வகையில் அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு ஆதரவளித்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

RIshabh Pant Poor Batting

தொடர்ச்சியான ஆதரவு:
அத்துடன் ஆரம்ப காலத்தில் அனைவருமே தடுமாறுவார்கள் என்பதை சுட்டிக்காட்டும் சில முன்னாள் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே சாதித்ததை போல் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் நாட்கள் செல்ல செல்ல முதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுவார் என்று ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதிலும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் அடுத்த 10 வருடங்களுக்கு இந்திய அணியின் முக்கிய வீரராக செயல்படுவார் என்றும் நிறைய ஜாம்பவான்கள் ஏற்கனவே பாராட்டியிருந்தனர்.

- Advertisement -

அதே சமயம் ரிஷப் பண்ட்க்கு முற்றிலுமாக வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று எந்த ரசிகர்களும் கூறவில்லை. மாறாக சொதப்பலாக செயல்படும் போது ஒரு சில போட்டிகளில் அதிரடியாக நீக்கி வாய்ப்பின் அருமையை அவருக்கு உணர்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் தற்சமயத்தில் ரிஷப் பண்ட் சுமாராக செயல்பட்டாலும் வருங்காலத்தில் டி20 கிரிக்கெட்டில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய துருப்புச் சீட்டாக செயல்படுவார் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Chopra

தற்சமயத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது யூடியூப் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “அவருடைய வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். சொல்லப்போனால் வருங்காலங்களில் அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக கூட வரலாம். அவரிடம் எதிரணியை பயமுறுத்தும் தன்மை உள்ளது. அவர் எப்போதும் தைரியமாக விளையாடக் கூடியவர். ஆனால் தற்சமயத்தில் அவர் இதை செய்யலாமா அல்லது அதை அடிக்கலாமா அல்லது பொறுமையாக விளையாடலாமா அல்லது இதை செய்தால் நம்மை அணியிலிருந்து நீக்கி விடுவார்களா என்ற தடுமாற்றத்தில் உள்ளார் என்பது உண்மையாகும்”

“அவர் அனைத்தையும் செய்கிறார். ஆனால் திறமையான இளம் வீரராக நீங்கள் இருக்கும் போது இந்த தடுமாற்றங்கள் நிகழும். அத்துடன் அவர் மீது நிலவும் அதிகப்படியான எதிர்பார்ப்புகளும் அவரை தாக்குகிறது. அதனால் சில சமயங்களில் அழுத்தத்தை உணரும் அவர் அடிக்க முயற்சித்து அவுட்டாகி விடுகிறார். அது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது” என்று கூறினார்.

pant

அதாவது தற்சமயத்தில் தடுமாற்றமாக செயல்பட்டாலும் நல்ல திறமையும் இளமையும் பெற்றுள்ள ரிஷப் பண்ட் வரும் காலங்களில் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்து கேப்டனாக கூட வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே நிறைய சாதனைகளை சாதித்துள்ளதால் அவர் மீது ஏற்படும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் அவருக்கு அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துவதே தற்போதைய தடுமாற்றத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement