10 நாள்ல இந்த பிரச்சனை முடியலைனா ? ரிஷப் பண்ட் இந்தியாவுக்கு திரும்ப வேண்டியதுதான் – சிக்கலில் பண்ட்

Pant
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்காக ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதற்கு முன்னதாக இந்தியாவில் கிட்டதட்ட இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த வீரர்கள் அனைவருக்கும் இருமுறை பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகே இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர்.

IND

அதன் பிறகு இங்கிலாந்து சென்று ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பரிசோதனைக்கு பிறகே அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடினார்கள். அதனை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட தயாராகி வரும் நிலையில் இந்திய அணிக்கு ஒரு மாதம் ஓய்வு இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய வீரர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இப்படி வெளியே சென்று வந்த இந்திய வீரர்களில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது. ஆனாலும் அந்த இருவர் யார் என்ற செய்தியே தற்போது ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.

pant 1

அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரிஷப் பண்ட் வெளியே சென்று ரசிகர்களுடன் கால்பந்து ஆட்டத்தை ரசித்ததும் மட்டுமின்றி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதன் காரணமாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பத்து நாட்களுக்கு பிறகும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவு வருமாயின் அவர் நிச்சயம் இந்தியா திரும்ப அனுப்பப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement