தோனி போன்று ஒரே செயலை செய்து ஓவர் நைட்டில் சூப்பர்ஸ்டார் ஆன பண்ட் – வைரலாகும் புகைப்படம்

Pant-4

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் 18 ஆம் தேதி விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Pant-3

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த செயல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஹெட்மையர் ஒரு கட்டத்தில் தனது காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக மைதானத்தில் வலியுடன் விழுந்தார்.

அதனை கண்ட ரிஷப் பண்ட் உடனே அவரின் அருகில் சென்று அவரின் கால்களை பிடித்து சுளுக்கு சரியாவதற்கான முதலுதவிகளை செய்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மருத்துவ நிர்வாகி வருவதற்குள் பண்ட் செய்த இந்தச் செயல் தற்போது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரின் போது சில ஆண்டுகளுக்கு முன்னர் தோனி இதனை முதலில் செய்தார்.

Pant-2

டூபிளிஸ்சிஸ் காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக மைதானத்தில் கீழே விழ அப்போது தோனி அவருக்கு இதேபோன்று உதவியது இணையத்தில் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து தோனியின் வழியில் தற்போது அவரது சிஷ்யரான பண்ட் களத்தில் வலியுடன் துடித்த வீரருக்கு உதவியதால் இவரது இந்த செயல் தற்போது ரசிகர்களால் வரவேற்கப்பட்டு அதிக அளவில் பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -