இரண்டாவது ஒருநாள் போட்டி : இந்திய அணி முதலில் பேட்டிங். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஆடப்போவது இவர்தான்

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டு முடிந்துள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளார். அதன்படி இந்திய அணி இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

toss

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் யார் யார் விளையாடுவார்கள் ? அணியில் எந்தெந்த மாற்றம் இருக்கும் என்று அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடுவாரா ? ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக யார் விளையாடுவது ? என்ற கேள்வி பரவலாக இருந்தது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் காயம் பெரிய அளவில் இல்லை என்பதால் அவர் மீண்டும் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் சூர்யகுமார் யாதவ் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதை தவிர இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் கிடையாது. டாசில் வெற்றி பெற்ற விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் மீண்டும் பேட்டிங் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம்.

Pant

இந்த மைதானத்தில் சூழ்நிலையை அறிந்து நாங்கள் ரன்களை குவித்தால் அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த போட்டியிலும் எங்களால் மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க முடியும் என்று நினைக்கிறேன். கடைசி போட்டியில் எவ்வாறு விளையாடினோமோ அதேபோன்று இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடுவோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான இந்திய அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) கே.எல்.ராகுல், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஷர்துல் தாகூர், 10) குல்தீப் யாதவ், 11) பிரசித் கிருஷ்ணா.