சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி போட்ட இவருக்கு தான் கொரோனா பாசிட்டிவ்வாம் – இவருக்கா இப்படி ?

IND
Advertisement

இந்திய அணி ஜூன் மாத தொடக்கத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து புறப்பட்டது. அதற்கு முன்னதாக இந்தியாவில் இருந்து புறப்படும் வீரர்கள் கொண்ட முழு அணியும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு இருகட்ட பரிசோதனைக்கு பின்னரே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

IND

மேலும் இங்கிலாந்தில் சென்ற இந்திய அணி அங்கும் ஒருவாரம் குவாரன்டைனில் இருந்து அதன் பிறகே வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார்கள். அதன் பின்னர் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் ஒரு மாத காலம் இடைவெளி உள்ளதால் வீரர்களுக்கு மூன்று வாரம் ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் அவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தனர். மேலும் அதனை புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

IND

இந்நிலையில் தற்போது இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அந்த வீரர்கள் யார் ? யார் ? என்று அணி நிர்வாகம் சார்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Pant

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று உறுதியானத்தில் ஒரு வீரர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் தற்போது பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் யாதெனில் இவர் சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement