- Advertisement -
இந்திய கிரிக்கெட்

634 நாட்கள்.. தல தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்.. யுவராஜ் போல மாஸ் கம்பேக்

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் சென்னையில் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்த நிலையில் வங்கதேசத்துக்கு ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதன் பின் பேட்டிங் செய்த வங்கதேசம் மோசமாக விளையாடி 149 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

தோனிக்கு சமமாக ரிஷப் பண்ட்:

அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 2வது நாள் மாலையில் சேர்ந்த அவர்கள் 3வது நாள் உணவு இடைவெளி வரை வங்கதேச பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அரை சதமடித்தனர். அதில் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 13 பவுண்டரி 4 சிக்சருடன் 109 (127) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் வாழ்நாள் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். சொல்லப்போனால் 144 இன்னிங்ஸ்களில் தோனி அடித்த 6 சதங்களை வெறும் 58 இன்னிங்சிலேயே அடித்துள்ள ரிஷப் பண்ட் இருமடங்கு வேகமாக சமன் செய்து தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

யுவராஜ் போல கம்பேக்:

மேலும் கடந்த வருடம் கார் விபத்தால் சந்தித்த காயத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் 635 நாட்கள் கழித்து இப்போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் சதத்தை விளாசி யுவராஜ் சிங் போல போராடி அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ரிஷப் பண்டின் இந்த ஆட்டத்தை காண பணம் கொடுத்து கூட டிக்கெட் வாங்கி போட்டியை பார்ப்பேன் – ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்திய சுப்மன் கில்லும் சதமடித்தார். இறுதியில் கில் 119* ரன்களும் கேஎல் ராகுல் 22* ரன்களும் எடுத்ததால் இந்தியா 287-4 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அதனால் வங்கதேசம் வெற்றி பெற இப்போட்டியில் இந்தியா 515 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது

- Advertisement -