டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட ரிஷப் பண்ட். ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியல் – விவரம் இதோ

Pant-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் ஐசிசி தற்போது சர்வதேச கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்படி ஐசிசி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்தையும், டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

- Advertisement -

மேலும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் வீரரான டேவிட் மலன் தொடர்ந்து டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஆரோன் பின்ச் இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் வீரரான கே.எல் ராகுல் 3-வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை தற்போது கடந்த சில தொடர்களாகவே அதிரடியை காட்டிவரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட் புதிய உச்சத்தை தொட்டுள்ளார் என்று கூறவேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் பார்ம்முக்கு திரும்பிய அவர் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் முக்கியமான தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அதிரடி சதம் அடித்த அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Pant

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தற்போதுதான் ரிஷப் பண்ட் நுழைந்துள்ளார். அதேபோன்று இங்கிலாந்து தொடருக்கு முன்னர் 14வது இடத்தில் இருந்த அவர் கடைசி போட்டியில் அடித்த சதம் மூலம் 7 இடங்கள் முன்னேறி தற்போது இந்த ஏழாவது இடத்தை இந்திய அணியின் சக வீரரான ரோகித் சர்மா மற்றும் இங்கிலாந்து நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோருடன் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

pant 1

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியில் தான் இழந்த டி20 மற்றும் ஒரு நாள் அணியிலும் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement