டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் அடையாத உச்சத்தை தொட்ட ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Pant-3
- Advertisement -

சில தினங்களுக்கு முன் ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டிருந்தது ஐசிசி. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்தையும், ரோகித் சர்மா 8வது இடத்தையும் பிடித்துள்ளனர். இத்தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், இதுவரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த ஒரு வீரரும் செய்யாத மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்.

Pant

- Advertisement -

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், 747 புள்ளிகளைப் பெற்றுள்ள ரிஷப் பன்ட், தரவரிசைப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இதன் மூலமாக டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம்பெற்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவிற்கு டெஸ்ட் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோணி கூட, டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் முதல் பத்து இடத்தில் இடம் பிடித்தது இல்லை.

ஆனால் இளம் வீரரான ரிஷப் பண்ட் இந்த சாதனையை செய்ததால் அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட், அத்தொடரில் சதமடித்து அசத்தியதால், அவருக்கு தொடந்து இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த டெஸ்ட் தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடாமல் போனதால், அவருடைய இடம் கேள்விக் குறியானது.

Pant

அதற்கிடையில் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் ரிஷப் பன்டிற்கு பதிலாக விருத்திமான் சாஹா அணியில் சேர்க்கப்படார். ஆனால் அவரும் சரியாக விளையாடாத காரணத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ரிஷப் பன்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரிஷப் பண்ட் அந்த தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி 274 ரன்கள் குவித்தார். முக்கியமாக கடைசி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 89 ரன்கள் அடித்து இறுவரை ஆட்டமிழக்காமல், அந்த போட்டியை வென்று தந்ததோடு மட்டுமல்லாமல் அந்த தொடரையும் இந்தியா கைப்பற்ற பெரிதும் உதவினார்.

pant 1

அதற்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 54 என்ற ஆவ்ரேஜில், அந்த தொடரில் 276 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அற்புதமாக விளையாடிய காரணத்தினால் தான், தற்போது ஐசிசி வெளியிட்டுள் தரவரிசைப் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளார் ரிஷப் பன்ட்.

Advertisement