தோனியின் சாதனையை காலி செய்ய இருக்கும் பண்ட். அடக்கடவுளே இப்படி ஒரு சாதனையா ? – விவரம் இதோ

Pant

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Pant

இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது ஹைதராபாத் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் விக்கெட் கீப்பர் தோனியின் சாதனை ஒன்றை இளம் விக்கெட் கீப்பர் தகர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி தற்போது வைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 5 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்துள்ளார்.

Pant-2

தோனிக்கு பதிலாக தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வரும் பண்ட் 7 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை விழ காரணமாக இருந்துள்ளார். இந்த தொடரின் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் விழ பண்ட் காரணமாக இருக்கும் பட்சத்தில் தோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -