எல்லாரும் குறைச்சு மதிப்பிடுறாங்க.. அவர் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்.. அஸ்வின் நம்பிக்கை

R Ashwin 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்து அசத்தினர். அதே போல 2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 109, சுப்மன் கில் 119* ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினர்.

குறிப்பாக கார் விபத்திலிருந்து குணமடைந்த பின் 634 நாட்கள் கழித்து ரிசப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் தன்னுடைய 6வது சதத்தை அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதையும் சேர்த்து அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையும் அவர் சமன் செய்தார்.

- Advertisement -

சாதிக்க பிறந்தவர்:

இந்நிலையில் ஒற்றைக் கையில் குருட்டுத்தனமாக சிக்சர்கள் அடிப்பதாக ரிஷப் பண்ட்டை பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு பிறந்தவர் என்று பாராட்டும் அஸ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் மீண்டும் சதமடித்தது நல்ல உணர்வை கொடுத்தது. முதல் இன்னிங்சிலும் அவர் நன்றாக விளையாடினார்”

“இருப்பினும் சிறப்பாக விளையாடும் அவர் எப்படி அவுட்டானாார் என்று ரோஹித் சர்மாவிடம் 10 முறை கூறியிருப்பேன். இவர் கிரிக்கெட்டுகாகவே செய்யப்பட்டவர். ஒவ்வொரு கோணத்திலும் அவர் கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக பிறந்தவரைப் போல் தெரிகிறது. மிகவும் வலுவான அவர் அடிக்கும் போது பந்து தூரமாக செல்கிறது. சில நேரங்களில் அவர் ஒற்றைக் கையில் அடிக்கிறார்”

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

“அனைவரும் அதைப் பார்த்து அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இருப்பினும் அவரிடம் அந்தளவுக்கு திறன் இருக்கிறது. ரிஷப் பண்ட் அனைத்திற்கும் ஆம் என்று சொல்கிறார். மிகவும் திறமை வாய்ந்த அவர் பந்தை தவிற விடும் போது மீண்டும் இறங்கி வந்து அடிக்கிறார். வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட்டிங் செய்த அவர் மிகவும் வித்தியாசமான ஜாலியான நபர்” என்று கூறினார்

இதையும் படிங்க: தப்பு பண்ண அப்புறமும் இதை சொன்னாரு.. ரோஹித் மாதிரி கேப்டனை பாத்ததில்ல.. ஆகாஷ் தீப் பேட்டி

அந்த வகையில் மிகப்பெரிய விபத்தில் உயிர் தப்பிய ரிஷப் பண்ட் மீண்டும் கிரிக்கெட்டில் சாதிக்க வந்துள்ளார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குகிறது. அப்போட்டியிலும் வங்கதேசத்தை தோற்கடித்து தொடரை வெல்ல இந்திய அணியினர் கான்பூரில் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Advertisement