அவ்ளோ பெரிய ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட பர்ஸ்ட் கேள்வி இதுதான் – மருத்துவர் அளித்த பேட்டி

Rishabh Pant (1)
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் திரும்பிய வேளையில் அதிகாலை வேளையில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் அங்கிருந்த சில நபர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி இதுதான் : மருத்துவர் அளித்த பேட்டி

பின்னர் சிகிச்சைக்குப் பிறகு 16 மாதங்கள் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாமல் காத்திருந்த அவர் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் கம்பேக் கொடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பின்னர் டி20 உலக கோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் முக்கிய வீரராக விளையாடியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஒருவர் ரிஷப் பண்ட் அறுவைசிகிச்சை முடிந்து கண் விழித்ததும் கேட்ட முதல் கேள்வி என்ன? என்பது குறித்த சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் அந்த மருத்துவர் கூறியதாவது :

ரிஷப் பண்ட்டிற்கு அந்த விபத்தின் போது முழங்காலில் மிகப்பெரிய அளவில் அடி பட்டிருந்ததால் அவருக்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சையை நாங்கள் செய்து முடித்தோம். பின்னர் அவர் கண் விழித்ததுமே என்னிடம் “மீண்டும் நான் கிரிக்கெட் விளையாட முடியுமா? என்ற கேள்வியை தான் கேட்டார். அவரது தாயார் “அவரால் எழுந்து நடக்க முடியுமா?” என்று என்னிடம் கேட்டார்.

- Advertisement -

அந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர் மிகப்பெரிய வலியை உணர்ந்து இருப்பார். ஏனெனில் அந்த அளவிற்கு அவரது உடலில் வீக்கமும் காயமும் இருந்தது. எப்படியும் அவரது காயம் குணமடைய 18 மாதத்திற்கு மேல் ஆகும் என்று நாங்கள் கூறியிருந்தோம். அதன் காரணமாக ஊன்றுகோல் உதவியுடன் நடக்க ஆரம்பித்த அவர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார்.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் சச்சின் அடிச்ச முதல் சதத்துக்கு நான் தான் காரணம்.. சுவாரசிய சம்பத்தை பகிர்ந்த ஆலன் லம்ப்

நாங்கள் நினைத்ததை விட ரிஷப் பண்ட் தனது கடின உழைப்பால் விரைவாகவே குணமடைந்தார். நாங்கள் அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப 18 மாதங்கள் ஆகும் என்று நினைத்த வேளையில் அவர் சிறப்பாக உடற்தகுதியை மேம்படுத்தி விரைவாகவே அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்தார் என அந்த மருத்துவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement