மீண்டும் கேப்டனாக களத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்.. எந்த தொடரில் தெரியுமா? – விவரம் இதோ

Rishabh Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நான்காவது ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் கால் பகுதியில் காயமடைந்தார். அதன் காரணமாக சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த சில மாதங்களாகவே ஓய்வில் இருந்து வருகிறார்.

மீண்டும் கேப்டனாக திரும்பும் ரிஷப் பண்ட் :

அதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் ரிஷப் பண்ட் எப்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார்? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவர் மீண்டும் நவம்பர் மாதம் துவங்கவுள்ள தொடரில் அதிகாரபூர்வமாக கேப்டனாக திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக தற்போது ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 2 போட்டிகளிலுமே ரிஷப் பண்ட் கேப்டனாகவும், சாய் சுதர்சன் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதன் மூலம் இங்கிலாந்து தொடரோடு இந்திய அணியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய ஏ அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. இந்த தொடரில் அவரது செயல்பாடு எவ்வாறு அமைகிறது? என்பதை பொருத்தும், உடற்தகுதி எப்படி இருக்கிறது? என்பதை பொருத்தும் அடுத்த தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிகழ்த்திய அரிதான சாதனை – விவரம் இதோ

இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ரிஷப் பண்ட் 76 டி20 போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 125 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement