நீரஜ் சோப்ரா வென்றால் ரசிகர்களுக்கு 2 மெகா பரிசை அறிவித்த ரிஷப் பண்ட்.. பெறுவதற்கு செய்ய வேண்டியது என்ன?

- Advertisement -

பாரிஸ் நகரில் 2024 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. குறிப்பாக மனு பாக்கர், சரபோத்ஜித் சிங், ஸ்வப்னில் குசலே ஆகியோர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். இருப்பினும் இத்தொடரில் இதுவரை இந்தியா தங்கப் பதக்கம் வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.

அந்த சூழ்நிலையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை வென்றார். வரலாற்றிலேயே ஈட்டி எறிதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரராக சாதனை படைத்த அவர் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலும் களமிறங்கியுள்ளார். குறிப்பாக ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற தகுதி சுற்றில் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் வீசினார்.

- Advertisement -

பண்ட் அறிவிப்பு:
அதனால் கலந்து கொண்ட 12 வீரர்களில் நீண்ட தூரம் வீசி முதலிடம் பிடித்த அவர் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றார். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா கலந்து கொள்ள உள்ளார். அப்போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக அவர் மீண்டும் தங்கப்பதக்கத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா 2024 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ஒரு அதிர்ஷ்டமிக்க ரசிகருக்கு 100089 ரூபாய் பரிசாக கொடுக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் அறிவித்துள்ளார். அத்துடன் தம்மை கவரும் டாப் 10 ரசிகர்களுக்கு விமான டிக்கெட் பரிசாக கொடுக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதை பெறுவதற்கு ரசிகர்கள் செய்ய வேண்டியது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பண்ட் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“நாளை நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் என்னுடைய இந்த ட்வீட்டை லைக் செய்து அதிகமாக கமெண்ட் செய்யும் ஒரு அதிர்ஷ்டசாலி ரசிகருக்கு 100089 ரூபாய் செலுத்துவேன். அத்துடன் அதிக பார்வைகளை பெறும் எஞ்சிய டாப் 10 ரசிகர்கள் விமான டிக்கெட்டுகளை பெறுவார்கள். என்னுடைய சகோதரர் நீரஜ்க்கு இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவை கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு விளையாட தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கனும்ன்னா.. இதை செய்யனும்ன்னு ரோஹித் சொல்லிருக்காரு.. ஓஜா பேட்டி

முன்னதாக நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லும் பட்சத்தில் தங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இலவசமாக விசா பதிவு செய்து கொடுக்கப்படும் என “அட்லிஸ்” என்ற நிறுவனத்தின் தலைவர் மோகக் நாத்டா சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினிஷா போகத் இன்று தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement