எல்லாம் சரிதான் ஆனால் கொஞ்சம் உடம்பை குறைங்க, 2 இந்திய வீரர்களுக்கு – டேனிஷ் கனேரியா அட்வைஸ்

Kaneria
- Advertisement -

கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் திறமை இருந்தால் போதும் என்ற நிலைமையால் இன்சமாம்-உல்-ஹக் போன்ற வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் திறமை இருப்பதுடன் நல்ல உடல் தகுதியும் தேவைப்படுகிறது. குறிப்பாக பீல்டிங் துறையில் மிகவும் வேகமாக ஓடி தங்களது அணிக்காக எக்ஸ்ட்ராவாக வெற்றிக்கு பாடுபடுவதற்கு ஃபிட்னஸ் தேவைப்படுகிறது. அத்துடன் காயத்தில் இருந்து தப்பித்து நீண்டகாலம் விளையாடுவதற்கும் இந்த உடல் தகுதி தேவைப்படுகிறது. அந்த வகையில் பிட்னெஸ் எனும் அம்சத்தை இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக கடந்த 2008இல் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கொண்டுவந்து சேவாக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்தார்.

Inzamam

- Advertisement -

அதை 2017இல் 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தீவிரமாக பின்பற்றி அணியில் இருக்கும் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தார். அதனால் உலக அரங்கில் வெளிநாட்டினருக்கே போட்டி போட்ட இந்தியாவை பார்த்த இந்திய அணி நிர்வாகமும் இப்போதெல்லாம் திறமை இருப்பதுடன் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை பார்த்து தான் வாய்ப்பு கொடுக்கிறது.

சுமார் ரோஹித், பண்ட்:
இந்நிலையில் சமீப காலங்களில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோரின் தடுமாற்றத்திற்கு அவர்களின் சுமாரான பிட்னெஸ் ஒரு முக்கிய காரணமாக அமைவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். கடந்த 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் விளையாடி வரும் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட் தவிர ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இதுவரை சுமாராகவே செயல்பட்டு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

Rohit Sharma vs KKR

அதுவும் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா தொடரில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டனாகவும் அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டிய பேட்ஸ்மேனாகவும் சொசதப்பிய அவர் கடும் விமர்சனங்களை சந்தித்தார். அதேபோல் ரோகித் சர்மாவும் சமீப காலங்களில் அவரின் பிட்னஸ் விஷயத்தில் சமூக வலைதளங்களில் பல ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகும் அளவுக்கு சுமாராக இருந்து வருகிறார். அது உண்மையாகவே அவரின் கேரியரியலும் எதிரொலித்தது. ஆம் கடந்த 2021 இறுதியில் விராட் கோலிக்கு பின் முழுநேர ஒருநாள் கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாகவே காயமடைந்த அவர் அதிலிருந்து 2 – 3 மாதங்கள் கழித்து ஒருவழியாக மீண்டு வந்தது ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

உடம்பை குறைங்க:
அதன்பின் பழைய பன்னீர் செல்வத்தை போலல்லாமல் பேட்டிங்கிலும் தடுமாறி வரும் அவர் ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக ஒரு அரைசதம் கூட அடிக்க மோசமான பார்மில் தவிக்கிறார். அதேபோல் ரிஷப் பண்ட்டும் ஐபிஎல் 2022 தொடரில் அதிரடியாக ஆடினாலும் பெரிய ரன்கள் எடுக்காமல் சுமாராகவே செயல்பட்டார். அதனால் முழு பார்முக்கு திரும்புவதற்கு முதலில் அவர்கள் உடம்பை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துப் பேசியது பின்வருமாறு.

Kaneria

“ரிஷப் பண்ட் பிட்னெஸ் எதிர்பார்க்கப்பட்ட அளவு இல்லாமல் குறைவாகவே உள்ளது. இது சாதாரணமானது என்று நான் கூறுவேன். கேப்டனாக விராட் கோலி இருந்தபோது இந்திய அணியினரின் உடல் தகுதியில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இன்னும் பண்ட் பின்தங்கியுள்ளார். அதேபோல் ரோகித் சர்மாவும் அந்த அளவுக்கு பிட்டாக இல்லை. அவர் ஒரு பேட்ஸ்மேனாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை”

- Advertisement -

“ஆனால் விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் அதில் முன்னேற வேண்டும். இளம் வயதிலேயே நிறைய வீரர்கள் உடல் எடை பிரச்சனைகளால் சிறப்பாக கீப்பிங் செய்ய தடுமாறுவதை பார்க்க முடிகிறது. அது உங்களின் நெகிழ்வு தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பேட்டிங்கில் அவர் ஆரம்பத்திலிருந்தே பந்துவீச்சாளர்களை அடிக்கும் அணுகுமுறையுடன் விளையாடுகிறார். இருப்பினும் மன உறுதியும் முதிர்ச்சியும் நல்ல உடல் தகுதியால் மட்டுமே வரும்” என்று கூறினார்.

RIshabh Pant Dinesh Karthik

இத்துடன் 37 வயதை கடந்தும் ஃபிட்டாக இருப்பதாலேயே தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணிக்குள் வர முடிந்ததாக பாராட்டும் டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட் அவரை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த வயதிலும் தினேஷ் கார்த்திக் சூப்பர் ஃபிட்டாக இருப்பதை பாருங்கள். அதை அவரின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க : அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து பேசிய – குட்டி சேவாக் ப்ரித்வி ஷா

பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட் 70 ரன்களை அடித்திருந்தாலும் அவரின் புள்ளி விவரங்கள் வீழ்ச்சிலேயே உள்ளது. எனவே தினேஷ் கார்த்திக், இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இருப்பதால் அவர் தனது இடத்திற்காக கடுமையாக உழைத்து போட்டியிட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement