இந்த 8 ரன்கள் இல்லை என்றால் மானம் போயிருக்கும் அணியின் மானத்தை காப்பாற்றிய இளம் வீரர் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி இந்திய அணிக்கு ஒரு மிக மோசமான தோல்வி என்றாலும் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது என்பது இந்திய அணிக்கு ஒரு ஆறுதலான விடயமாக உள்ளது.

Southee 2

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸ்ன் போது ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் அடித்த சில பவுண்டரிகள் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. நியூசிலாந்து அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 165 ரன்கள் எடுத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது சற்று சுமாரான தொடக்கத்தை கண்டாலும் இறுதியில் அதனை காப்பாற்றும் வழியை கோட்டைவிட்டது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்த இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 விக்கெட்டுகள் கையில் இருந்தன. ஆனால் இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை இழக்க இன்னிங்ஸ் தோல்வி அடைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்னும் 20 ரன்கள் மேல் எடுத்தால் மட்டுமே இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

pant

அப்போது ரிஷப் பண்ட் இசாந்த் சர்மாவுடன் இணைந்து சில பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது. ரிஷப் பண்ட் 25 ரன்கள் மற்றும் இஷாந்த் சர்மா 12 ரன்கள் அடித்தாலும் அது இந்திய அணியின் மானத்தைக் காப்பாற்றும் வகையில் அமைந்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement