- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி, கிர்மானி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது வீரராக ரிஷப் பண்ட் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூன் 6-ம் தேதியான நாளை நியூ சண்டிகார் நகரில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது சண்டிகர் நகரில் உள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

3 ஆவது இந்திய வீரராக ரிஷப் பண்ட் நிகழ்த்தப்போகும் சாதனை :

இந்நிலையில் நாளைய போட்டியில் அவர் விளையாட இருப்பதன் மூலம் மஹேந்திர சிங் தோனி மற்றும் சையத் கிர்மானி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்தியா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதால் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி இருக்கிறார். இவ்வேளையில் நாளைய போட்டியில் அவர் களமிறங்குவதன் மூலம் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

இதுவரை இந்திய அணிக்காக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் எட்டு சதம் மற்றும் பதினெட்டு அரைசதம் என 3476 ரன்களை குவித்துள்ளார். நாளை அவர் விளையாட இருக்கும் போட்டியானது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவரது 50 ஆவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

இதன்மூலம் இந்திய அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சையத் கிர்மானி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தினை பிடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -