- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை செய்யாம கலக்கிட்டாரு.. ரிஷப் பண்ட் இல்லனா இந்தியா 100 தாண்டிருக்காது.. திட்டிய கவாஸ்கர் பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கும் அந்தத் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் நடைபெறுகிறது. அதில் முதலில் விளையாடிய இந்தியா 185 ரன்கள் எடுத்து பின்னர் ஆஸ்திரேலியாவை 181க்கு ஆல் அவுட்டாக்கியது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்களும் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக நான்கு ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 141-6 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், ராகுல், விராட் கோலி, கில், நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர்.

- Advertisement -

மிரட்டல் ஆட்டம்:

அப்போது மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிஷப் பண்ட் முதல் பந்திலேயே சிக்ஸரை தெறிக்க விட்டார். தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61 (33) ரன்கள் விளாசி அவுட்டானார். குறிப்பாக 29 பந்தில் 50 ரன்கள் தொட்ட அவர் ஆஸ்திரேலிய மண்ணில் வேகமான அரை சதத்தை அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார்.

அவருடைய ஆட்டத்தால் 145 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 230 – 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருக்கிறது. அதற்கு களத்தில் இருக்கும் வாஷிங்டன், சுந்தர் ஜடேஜா ஆகியோர் நன்றாக விளையாடுவது அவசியமாகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் மட்டும் அதிரடி காட்டாமல் போயிருந்தால் இந்தியா 100 ரன்கள் கூட தாண்டியிருக்காது என சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஸ்டுபிட் டூ புத்திசாலித்தனம்:

கடந்த போட்டியில் பண்ட்டை ஸ்டுப்பிட் என்று விமர்சித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் விளையாடும் விதத்தை வைத்து இது புத்திசாலித்தனமான ஆட்டம் என்று நினைக்கிறேன். அவர் ஸ்டம்புகளுக்கு முன்பாக விளையாடியதை நான் விரும்பினேன். பவர், டைமிங் ஆகியவற்றை கொண்டுள்ள அவரால் நீண்ட தூரத்திற்கு பந்தை அடிக்க முடியும்”

இதையும் படிங்க: விராட் கோலியை வச்சு செய்து மிரட்டலான சாதனையை நிகழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் – விவரம் இதோ

“ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் போன்ற கண்மூடித்தனமான ஷாட்டுகளை அடிக்கும் போது தான் அவர் பிரச்சனையில் சிக்குகிறார். ஏனெனில் இப்படி முன்னே நின்று அடிக்கும் போது கிடைக்கும் கட்டுப்பாடு அந்த வகையான ஆட்டத்தில் கிடைக்காது. அவருடைய 61 ரன்கள் தான் இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆட்டம் இல்லாமல் போயிருந்தால் இந்தியா 100 ரன்கள் கூட தாண்டியிருக்காது” என்று கூறினார்.

- Advertisement -