ஷாட் பிட்ச் பந்தில் அற்புதமான ஹெலிகாப்டர் ஷாட் அடித்த ரிஷப் பண்ட் – வைரலாகும் வீடியோ

Pant
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப்போட்டி இன்று தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

toss

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 37 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின்னர் கோலி களமிறங்கினார் இந்த போட்டியிலும் பெரிய இன்னிங்சை விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 7 மட்டுமே எடுத்து மொயின் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ரிஷப் பண்ட் மட்டும் ஒருபுறம் சிறப்பாக விளையாடி வந்தார். ராகுல் வந்த வேகத்தில் 7 ரன்களில் நடையை கட்ட ஹார்டிக் பாண்டியா உடன் கை கோர்த்தது அதிரடியாக ரன்களை குவித்தார்.

இவர்கள் இருவருமே அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பை உயர்த்தினர். குறிப்பாக பாண்டியா 44 பந்துகளில் 4 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என 64 ரன்களையும், பண்ட் 62 பந்துகளில் 4 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என 78 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின்போது 23வது ஓவரை வீசிய ரஷீத் பந்துவீச்சில் ரிஷப் பண்ட் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி யார்க்கர் பந்தையே பெரும்பாலான வீரர்கள் ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்து நாம் பார்த்து வருகையில் தற்போது ரஷீத் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை வித்தியாசமான முறையில் பண்ட் எதிர்கொண்டு அடித்தார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement