ஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..!

rishb

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்த நிலையில் டெஸ்ட் தொடர் துவங்கியது.


கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 323 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்திய அணி 12 வது முறையாக ஆஸ்திரேலியாவில் இப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு முன் வந்த 11 முறையும், முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இப்போது அந்த வரலாற்றை மாற்றி வெற்றியுடன் இந்த தொடரைத் தொடங்கியுள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் 11 கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட் அதிக ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த ஜேக் ரஸ்ஸல் மற்றும்ி டிவில்லியர்ஸின்  சாதனைகளை சமன் செய்துள்ளார்.

ரிஷப் பண்ட் விளையாடிய டெஸ்ட் போட்டியில்104 ஓவரின் 5 வது பந்தை லயன் அடித்த போது அது மட்டையில் பட்டு கீப்பிங் செய்து கொண்டிருந்த பண்ட்டிடம் சென்றது ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அந்த கேட்ச்சை தவறவிட்டார் பண்ட் ஒருவேளை அந்த கேட்ச்சை அவர் பிடித்திருந்தால் ஒரே டெஸ்ட் போட்டியில் 12 கேட்ச்களை பிடித்த முதல் கீப்பர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.