கீப்பராக கூட வேண்டாம்.! இவரை “Middle Order” பேட்ஸ்மேனாக சேர்த்துக்கொள்ளுங்கள்..! சுனில் கவாஸ்கர் அறிவுரை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிரிபார்த்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொதப்பி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியில் கோலியை தவிர மற்ற எந்த போட்டியாளர்களும் சரியாக விளையாடவில்லை. இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

Rishabh-Pant

இந்நிலையில் இந்திய அணியில் இளம் வீரரான ரிஷப் பண்டை அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை கூறியுள்ளார். இளம் வீரரான ரிஷப் பண்ட் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அதிரடியாக விளையாடி 684 ரன்களை எடுத்தார். மேலும், இவரது பேட்டிங் இத்தொடரில் சிறப்பாக இவரை அடையாளம் காட்டியது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுனில் கவாஸ்கர்  இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கான வாய்ப்பு குறித்து பேசுகையில் “இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. இளம் வீரர் ரிஷப் பண்ட்டை அணியில் கீப்பராக சேர்க்காவிட்டாலும், பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவாவது அணியில் சேர்க்கலாம். ” என்று ஆலோசனை கூறியுள்ளார்.

Rishabh pant

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரரான ரிஷப் பண்ட் சமீபத்தில் நடைபெற்ற ஐயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட இடம்பெறவில்லை.சமீபத்தில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் கூட இவர் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.