அறிமுக போட்டியில் சாதனை.! நம்பிக்கை வீண் போகவில்லை.! திறமையை நிரூபித்த இளம் வீரர்

rishb
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரே ஆன 3வது டெஸ்ட் போட்டி நேற்று ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் அறிமுக வீரராக களமிறங்கினர். பார்திவ் பட்டேலுக்கு அடுத்து டெஸ்ட் போட்டியில் இடது கை பழக்கமுடைய விக்கெட் கீப்பர் இவராவார்.

pant

- Advertisement -

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதனை தொடர்ந்து ராகுல் மற்றும் தவான் இறங்கி ஓரளவு சிறப்பான தொடக்கத்தையே தந்தனர். இருப்பினும் இங்கிலாந்து வீரர் வோக்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி(97) மற்றும் ரஹானே(81) இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய பண்ட் தான் சந்தித்த 2வது பந்தில் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் அவர் ஒரு சாதனை படைத்துள்ளார்.அதாவது அறிமுக போட்டியில் சிக்ஸர் அடித்து டெஸ்ட் ரன்களை துவங்கும் முதல் இந்திய வேற்றார் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். ஒட்டு மொத்தமாக இதற்கு முன் 11 வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

pant 1

இந்த அணியின் இளம் வீரரான ரிஷப் பண்டின் இந்த சாதனைக்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் ஒரு அதிரடி ஆட்டக்காரர் என்பது குறிப்பிட தக்கது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 307 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Advertisement