அறிமுக போட்டியில் கலக்கும் பண்ட்.! விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை.! குவியும் பாராட்டுகள்

pantt
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 18ஆம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது. குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களை சேர்த்தனர்.

pant 6

- Advertisement -

பிறகு, இங்கிலாந்து அணி சரிவினை சந்தித்து அடுத்தடுத்த விக்கெட்டுகள் மளமள என சரிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 168 முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரரான ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிக்ஸர் அடித்து சிறப்பான சாதனை ஒன்றை படைத்தார்.

மேலும், அறிமுக போட்டியில் விக்கெட் கீப்பர் முதல் இன்னிங்சில் அதிக கேட்ச் (5 கேட்ச்கள் ) பிடித்து மற்றுமொரு சதை படைத்தார். சில டைவ் கேட்ச்களையும் பிடித்து அசத்தினார். அவரது கீப்பிங் நுட்பங்கள் மிக அருமையாக இருந்தது. அவருடைய தன்னம்பிக்கை தான் அவரை அறிமுக போட்டியில் கூட பதட்டமடையாமல் வைத்துள்ளது. அவர் இந்திய அணிக்கு வலுவான வீரராக மாறும் அறிகுறி அவரிடத்தில் உள்ளது என்றே கூறலாம்.

pant hardik

தினேஷ் கார்த்திக் பதிலாக இந்திய அணியில் இதன்பிடித்த இவர் இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது. இவரின் இந்த சாதனை பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். மொத்தத்தில் இந்திய அணி இந்த போட்டியில் தற்போது வலுவான நிலையில் உள்ளது என்றே கூறலாம்.

Advertisement