3வது டெஸ்டில் அறிமுகம் ஆகும் 20வயது சிறுவன்.! தாக்கம் நிச்சயம் இருக்கும்.! ரவி சாஸ்திரி நம்பிக்கை

ravi
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்ட் அறிமுகம் ஆகிறார். என சொல்லியும் சொல்லாமல் மறைமுகமா தன் கருத்தினை வெளியிட்டு இருக்கிறார். நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் என்ன மாற்றங்கள் இருக்கும் என அவரிடம் கேட்க பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு ஒரு பதிலை கூறினார்.

pant debue

- Advertisement -

அதாவது உள்நாட்டு மைதானங்களில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் கார்த்திக் ஏனோ வெளிநாட்டு தொடர்களில் பிரகாசிக்க தவறிவருகிறார். காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாத சாஹாவிற்கு பதிலாக ஆடிவரும் கார்த்திக் சரியாக ஆடாததால் இளம் வீரரான ரிஷப் பண்ட் அணியில் அறிமுகம் ஆகா இருக்கிறார். பொதுவாக இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்கள் இந்திய மண்ணில் அறிமுகம் ஆவார்கள்.

அனால், பண்ட் அறிமுகம் ஆகும் முதல் டெஸ்ட் போட்டியே வெளிநாட்டு தொடர் அதுவும் முதல் இரு போட்டிகளை இழந்த அணியின் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அவர் அறிமுகம் ஆக இருக்கிறார். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அவர் ஆடினால் இனி வரும் தொடர்களில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வளம் வருவார். ஏனென்றால் தற்போது அவருக்கு 20வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

pant

இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இந்திய அணியின் வீரரான டிராவிட்டின் கீழ் பண்ட் விளையாடி வளர்த்துள்ளதால் அவர் நிச்சயம் நன்றாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவார். என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மேலும் ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட் பற்றி நாளை காலை 11மணிக்கு மேல் தெரியும் என்று சூசகமாக கூறினார்.

Advertisement