- Advertisement -
ஐ.பி.எல்

கே.கே.ஆர் அணி செய்த இந்த விடயத்திற்காக நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன் – ரிங்கு சிங் நெகிழ்ச்சி

இந்திய அணியின் நட்சத்திர இளம் இடதுகை அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 33 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரை சதங்களுடன் 42 சராசரியுடனும் 161 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 546 ரன்கள் குவித்துள்ளார். அது தவிர்த்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 55 ரன்கள் குவித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

கே.கே.ஆர் அணிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் : ரிங்கு சிங்

திறமை வாய்ந்த இளம் பினிஷராக பார்க்கப்படும் ரிங்கு சிங் 2018-ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 59 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் நான்கு அரை சதங்களுடன் 1099 ரன்களையும் குவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கே.கே.ஆர் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாளுக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அதன்பிறகு ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றதோடு மட்டுமின்றி இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தனது ஆரம்பகட்ட கடினமான சூழலில் கொல்கத்தா அணி தனக்கு செய்த உதவி குறித்து சில நினைவுகளை ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கே.கே.ஆர் அணி என்னுடைய கடினமான சூழ்நிலையிலும் என்னை ஆதரித்திருக்கிறது. அதனால் நான் அவர்களுக்கு நன்றி கடமைப்பட்டுள்ளேன். கடந்த 2021-ஆம் ஆண்டு ரயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது என்னுடைய முழங்காலில் காயம் ஏற்பட்டது.

- Advertisement -

அதனால் நான் மிகப்பெரிய சரிவை சந்திப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதே ஆண்டு என்னை கொல்கத்தா அணி 80 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. அந்த சமயத்தில் எனக்கு பண தேவை இருந்தது. பின்னர் காயத்திற்கான பரிசோதனை மேற்கொண்ட போது சிறிய காயமாகவே இருந்தது. அதன் பின்னர் நான் உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தாலும் என்னை அவர்கள் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : ஓமன் அணிக்கெதிரான போட்டியில் பும்ரா மட்டுமல்ல ஷிவம் துபேவும் நீக்கப்பட வாய்ப்பு.. என்ன காரணம்? – விவரம் இதோ

ஆனால் என் மீது நம்பிக்கை வைத்த அவர்கள் அடுத்த ஆண்டும் என்னை 55 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்கள். இப்படி அவர்கள் என்மேல் தொடர்ந்து நம்பிக்கை வைத்து என்னை அணியில் எடுத்ததாலே இன்று இவ்வளவு பெரிய வீரராக மாறியுள்ளதாகவும் ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -