நான் பேட்டிங் செய்ய உள்ள போனதுமே நிதீஷ் ரெட்டி என்கிட்ட இதைத்தான் சொன்னாரு – ரிங்கு சிங் பகிர்வு

Rinku
- Advertisement -

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி ஆரம்பத்திலேயே 41 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நிதீஷ் ரெட்டியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் :

அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் 59 பந்துகளில் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை காப்பாற்றினர். இந்த போட்டியில் 34 பந்துகளை சந்தித்த நிதீஷ் ரெட்டி 4 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் என 74 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதேபோன்று ரிங்கு சிங் 29 பந்துகளை சந்தித்து ஐந்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 53 ரன்களையும் குவித்து அசத்தினர். அவர்களது இந்த பாட்னர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் தான் களமிறங்கும் போது போட்டியின் சூழல் எவ்வாறு இருந்தது? நிதீஷ் ரெட்டி என்ன கூறினார்? என்பது குறித்து ரிங்கு சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் முன்னதாகவே கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் என்னை சூழ்நிலையை பற்றி யோசிக்காமல் எனக்கு வரும் இயல்பான ஷாட்டுகளை விளையாடும் படி கூறினார்கள். அவர்கள் கொடுத்த அந்த நம்பிக்கை எனக்கு பேட்டிங்கில் சுதந்திரத்தை கொடுத்தது.

- Advertisement -

அதோடு நான் பேட்டிங் செய்ய களம்புகுந்த வேளையில் உள்ளே இருந்த நிதீஷ் ரெட்டி பந்து நின்று வருவதால் பந்தை பார்த்து டைமிங்கில் விளையாடும்படி கூறினார். அதுமட்டும் இன்றி ரன் ரேட் வேகத்தை நாம் அதிகரிக்க வேண்டும் என்றும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டோம்.

இதையும் படிங்க : மலிங்கா, கேதர் யாதவ் போல முயற்சித்து பல்ப் வாங்கிய ரியான் பராக்.. 2.15 விதிமுறை மீறியதால் கிடைத்த தண்டனை

அதன்படியே நிதீஷ் ரெட்டி மிகச்சிறப்பாக என்னுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். நானும் மைதானத்தின் தன்மையை முதலில் கணித்து பின்னர் என்னுடைய ஆட்டத்தை விளையாடினேன் என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement