
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக துபாய் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 33 போட்டிகளில் விளையாடி மூன்று அரைசதத்துடன் 546 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். 161 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய டி20 அணியில் பினிஷிங் ரோலில் விளையாடி வருகிறார்.
ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே அவருக்கு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது யாஷ் தயாளுக்கு எதிராக 5 சித்தர்களை தொடர்ச்சியாக விளாசி அவரது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு மட்டுமின்றி ஒரே இரவில் உலகப் புகழும் பெற்றிருந்தார். இந்நிலையில் அந்த ஒரு சம்பவம் தான் தன்னுடைய வாழ்க்கையை திருப்பிப் போட்டது என்று ரிங்கு சிங் வெளிப்படையான ஒரு பேட்டியினை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
உண்மையிலேயே குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டிக்கு பின்னர்தான் என்னை பலருக்கும் அடையாளம் தெரிந்தது. அதோடு அந்த போட்டிக்கு பிறகு அதிகளவு அன்பும் எனக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற போது 5 சிக்ஸர்களை நான் அடித்ததெல்லாம் கனவு போன்று இருக்கிறது. கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய கடினமான உழைப்புக்கு கிடைத்த பரிசாகவும் அதனை நான் பார்க்கிறேன். அதன்பிறகு அனைத்துமே கடவுள் ஆசிர்வாதத்தால் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது என ரிங்கு சிங் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற முடிந்த உத்தர பிரதேச டி 20 லீக் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்:
இதையும் படிங்க : செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் போட்டியிலேயே சாதனை படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ
11 போட்டிகளில் விளையாடி 372 ரன்கள் குவித்ததோடு மட்டுமின்றி 24 சிக்ஸர்களையும் விளாசியுள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் அவரது பேட்டிங் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தயில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.