
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியானது நடைபெறவுள்ளது.
அதன்படி நாளை பிப்ரவரி 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் என்கிற இக்கட்டான நிலை உள்ளது. இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் ரிங்கு சிங் இந்திய அணியில் இருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.
இப்படி அவசர அவசரமாக சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் இந்திய அணியில் இருந்து இப்படி பாதியிலேயே வெளியேற என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங்கின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை சந்திப்பதற்காக ரிங்கு சிங் சென்னையில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.
இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி இந்த யுக்தியை கையில் எடுத்து விளையாடுங்க.. திலக் வர்மாவுக்கு – முகமது கைப் அட்வைஸ்
நாளை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி துவங்க இருக்கும் முன்னதாக ரிங்கு சிங் வெளியேறியதால் நிச்சயம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை தவற விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவர் இந்திய அணியில் விளையாடவில்லை என்றால் அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது.