
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் ஆலோசகராகவும் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அதனால் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய தலைமையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடரில் ரிங்கு சிங், கேப்டன் சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்களை கௌதம் கம்பீர் பகுதி நேர பவுலர்களாக பந்து வீச வைத்தது வெற்றிக்கு முக்கிய காரணமானது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா 17 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது.
அமைதியான கம்பீர்:
அந்தத் தோல்விக்கு பேட்டிங் வரிசையில் கௌதம் கம்பீர் செய்த சில மாற்றங்கள் காரணமானது. அதனால் இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோற்க கம்பீர் முக்கிய காரணமானதாக ரசிகர்கள் விமர்சித்தனர். முன்னதாக அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு வெளிப்படையாக பேசக்கூடியவராக அறியப்படும் கெளதம் கம்பீர் பெரும்பாலும் ஃபெவிலியனில் சிரிக்காமல் அமைதியாகவே அமர்ந்திருப்பார்.
அப்படி ஏன் இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு “மக்கள் தங்களுடைய அணி வெல்வதை பார்க்க வருகிறார்களே தவிர சிரிப்பதை பார்க்க வரவில்லை” என்று கம்பீர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் கௌதம் கம்பீர் வெற்றி கிடைக்கும் வரை உருக்கமான முகத்துடன் அமைதியாக அமர்ந்திருப்பார் என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்.
இருப்பினும் போட்டி முடிந்ததும் கம்பீர் சாதாரண நபர்களை போல் மாறி விடுவார் என்று தெரிவிக்கும் அவர் ரோஹித் சர்மா தங்களை போன்ற இளம் வீரர்களுக்கு முழுமையான ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளார். இது பற்றி ரிங்கு சிங் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் போட்டியைப் பற்றி மிகவும் சீரியஸாக இருப்பார். அதனாலேயே போட்டி நடக்கும் போது அவர் மிகவும் அமைதியாக உட்கார்ந்து இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும்”
இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிராக நாங்க எங்க டீம்ல தரமா 2 பேர விளையாட வைக்கப்போறோம் – பேட் கம்மின்ஸ் அதிரடி
“ஆனால் போட்டி முடிந்ததும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். எனவே அனைத்து நேரங்களிலும் அவர் சீரியஸாக இருப்பார் என்று அர்த்தமில்லை. போட்டி முடிந்ததும் அவர் சாதாரணமாகி விடுவார். ரோகித் சர்மா இளம் வீரர்ரிடம் நிறைய பேசி ஆதரவை கொடுப்பார். அவருடைய தலைமையில் விளையாடுவது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.