இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஷிவம் துபேவுக்கு பதிலா பினிஷராக ஆடப்போறது அவர்தான் – விவரம் இதோ

Dube
- Advertisement -

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ஷிவம் துபே மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்பதன் காரணமாக சமீபகாலமாகவே இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடிய அவர் இறுதிப்போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முக்கிய இன்னிங்சை விளையாடி இருந்தார்.

டி20 கிரிக்கெட்டில் ஹார்டிக் பாண்டியாவிற்கு அடுத்து ஆல்ரவுண்டாக பார்க்கப்படும் அவர் சமீப காலமாகவே தொடர்ச்சியாக இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். நாளை ஜூலை 27-ஆம் தேதி துவங்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இருப்பினும் இந்த டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அவருக்கு பதிலாக பினிஷராக ரிங்கு சிங் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை டி20 கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் விளையாடி 416 ரன்களை விளாசியுள்ளார்.

அது தவிர்த்து அவரது சராசரி 83-ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 176-ஆகவும் இருந்திருக்கிறது. தனக்கு கிடைக்கும் வெகு குறைந்த வாய்ப்புகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேவேளையில் ஷிவம் துபேக்கு இடம் கிடைத்திருந்தாலும் அவர் ஆல் ரவுண்டராக அணியில் விளையாடி வந்தார்.

- Advertisement -

ஆனால் பெரும்பாலான போட்டியில் அவரால் முழுமையாக பந்து வீசவும் முடியவில்லை. முழுவதுமாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் ரிங்கு சிங் தான் பினிஷராக விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : அவங்க ரெண்டு ஒரே பக்கம் நிக்குறாங்க.. 2 செஷன்லயே கம்பீர் தெளிவா சொல்லிட்டாரு. சுப்மன் கில் பேட்டி

ஏனெனில் ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக ரிங்கு சிங் ஆரம்ப கட்டத்தில் அணியில் இடம்பிடித்திருந்த போது அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக அவரை அணியில் நீடிக்க வைத்தார். அதோடு அவரது திறமையும் தொடர்ந்து அருகில் இருந்து பார்த்து வருவதால் ரிங்கு சிங்கிற்கு முன்னுரிமை கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement