- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை இந்திய அணியில் அவர் இடம்பெறாததை என்னால் நம்ப முடியவில்லை – பாண்டிங் கருத்து

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி வெளியான அறிவிப்பில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. இப்படி இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து பல்வேறு கருத்துக்கள் இந்திய அணித்தேர்வு குறித்து நிலவி வருகின்றன.

டி20 உலககோப்பை அணியில் அவர் இடம்பெறாததை நம்ப முடியவில்லை : ரிக்கி பாண்டிங்

அதிலும் குறிப்பாக துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேலுக்கு மீண்டும் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று உள்ளூர் தொடர்களில் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷனுக்கும் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டதால் தொடர்ந்து அவரே டி20 உலக கோப்பை தொடரின் துணை கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோசமான ஃபார்ம் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது நம்ப முடியவில்லை என்று தனது கருத்தினை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இன்னமும் என்னால் இந்த விடயத்தை நம்ப முடியவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் சற்று தடுமாற்றமாக தான் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இங்கிலாந்து தொடரின் போது அவர் விளையாடிய ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் இங்கிலாந்து மண்ணில் அப்படி விளையாடி நான் பார்த்ததில்லை. அப்படி ஒரு பேட்ஸ்மேனை டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் தேர்வு செய்யாதது உண்மையிலேயே என்னால் நம்ப முடியாத விடயமாகவே இருந்து வருகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த – மிட்சல் ஸ்டார்க்

அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு ஏகப்பட்ட வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்திய அணியில் வீரர்கள் குவிந்து இருக்கிறார்கள். இந்த ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் இந்திய அணி சொந்த மைதானத்தில் விளையாடவதால் கூடுதல் சாதகம் இருக்கும் என்றும் ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -