இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து அசத்தினாலும் பந்துவீச்சில் தற்போது வரை மிக மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர்கள் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய மிகவும் கஷ்டப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 166 ரன்களை அதுவும் 31 ஓவர்களில் அடித்து அசத்தலான துவக்கத்தை கொடுத்தனர்.
இந்திய அணி தடுமாற இதுவே காரணம் : ரிக்கி பாண்டிங்
பின்னர் வந்த வீரர்களும் தற்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷனிலேயே இந்திய அணியை விட 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் தற்போது வரை இவ்வித பிரச்சனையும் இன்றி அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் யாதெனில் : டியூக் பந்துகளில் வழக்கமாகவே இந்திய அணி அனுபவ வீரர்களை வைத்து போட்டியினை துவங்குவது வழக்கம்.
அந்த வகையில் பார்க்கையில் இந்த போட்டியின் போது பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர்தான் துவக்க ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் துவக்க ஓவர்களில் பந்துவீசியது இந்திய அணிக்கு பாதகமாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறுகையில் :
இந்திய அணி மொத்தமாகவே ஒரு திட்டத்தை தவறாக இந்த போட்டியில் வகுத்துவிட்டது. அறிமுக வீரரான அன்ஷுல் கம்போஜ் புதுப்பந்தில் பந்துவீசி இருக்கக்கூடாது. அவருக்கு பதிலாக பும்ராவுடன் அனுபவ வீரர் சிராஜ்தான் பந்து வீசியிருக்க வேண்டும். அதேபோன்று பும்ரா பந்துவீசிய ஃபெவிலியன் முனை சரியான ஒன்று கிடையாது.
இதையும் படிங்க : விராட், ரோஹித் இல்லன்னு சொல்லல.. ஆனா தோனி பாய் தான் எனக்கு அந்த சப்போர்ட் பண்ணாரு.. தவான் பேட்டி
அவர் விக்கெட் விழும் பெவிலியன் முனையை தேர்வு செய்யாமல் அதற்கு மாறாக இருக்கும் முனையில் இருந்து பந்து வீசினார் அதுவும் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. இங்கிலாந்து வீரர்கள் இந்த போட்டியின் துவக்கத்திலேயே இந்திய பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி விட்டதால் இந்திய அணியின் பந்துவீச்சு தற்போது மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளது என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



