ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தடுமாற்றமாக விளையாடியதால் கழற்றி விடப்பட்டிருந்தார். இருப்பினும் தற்போது அவரை தேர்வுக்குழு இந்திய அணியின் ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க முயற்சித்து வருகிறது.
அதனால் இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசியாக களமிறங்கிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் உலகக் கோப்பையில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கில்லுக்கு டாட்டா:
ஆனால் இந்திய அணியின் நன்மையை விட யாரும் பெரியவர் கிடையாது என்று கருதிய தேர்வுக்குழு கடைசி நேரத்தில் அவரை அணியிலிருந்து கழற்றி விட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்மன் கில்லை திடீரென டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி கழற்றி விட்டது ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சுப்மன் கில் விளையாடாததால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் கணித்துள்ளார். அந்தளவுக்கு இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பதாக தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னால் அதை நம்ப முடியவில்லை. சமீப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய ஃபார்ம் நன்றாக இல்லை”
பாண்டிங் வியப்பு:
“கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் அவர் விளையாடியதை நான் நிறைய பார்த்தேன். அப்படிப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு அணியில் இடம் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் அதுவே இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தையும் காண்பிக்கிறது. அதாவது சுப்மன் கில் போன்றவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. அது இந்திய அணியிடம் எவ்வளவு திறமையான நல்ல வீரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது”
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இருக்கும் வரை ருதுராஜ் கெய்க்வாடுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது – அஷ்வின் காட்டம்
“நாடு முழுவதும் இந்தியா ஆழமான திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும் அவர்கள் டாப் இடங்களில் வருகிறார்கள். அதற்கு காரணம் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களிடம் நிறைய நல்ல வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல சுப்மன் கில்லை விட டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட சஞ்சு சாம்சன், இஷான் கிசான், ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற இந்திய வீரர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



