
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சொந்த மண்ணிலேயே மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்த இந்தியாவை 3 – 1 (5) என்ற கணக்கில் இம்முறை ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி இல்லாதது இந்திய பவுலிங் துறையில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது”
“ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை எடுப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். மேலும் அவர்கள் இங்கே போதுமான அளவுக்கு நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அதற்கான திறமை தற்போது அணியில் இருக்கிறது. எனவே ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏதோ ஒரு போட்டியில் வெல்லலாம்”
“ஆனால் இப்போதும் நன்கு செட்டிலாகி அனுபவத்தை கொண்டுள்ள ஆஸ்திரேலியா அதனுடைய சொந்த மண்ணில் இம்முறை வீழ்த்துவது கடினம் என்று நான் நினைக்கிறேன். எனவே 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் மீண்டும் சொல்கிறேன்” எனக் கூறினார். அதே சமயம் இந்தியாவின் ரிஷப் பண்ட் அல்லது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் என்று பாண்டிங் கணித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அதிக ரன்கள் குவிக்கும் வீரராக ஸ்டீவ் ஸ்மித் அல்லது ரிஷப் பண்ட் இருப்பார் என்று நான் கருதுகிறேன். ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் பந்து கொஞ்சம் பளபளப்புத்தன்மை மற்றும் கடினத்தன்மை இழந்த பின் வீசக்கூடிய சூழ்நிலையில் விளையாடுவார். எனவே தற்போதுள்ள ஃபார்முக்கு அவர் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக வருவார் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க: ஃபைனலுக்கு போகலன்னா உலகம் அழிஞ்சுடுமா? அவங்க இல்லாம ஜெயிக்க தான் முடியுமா? பசித் அலி ஆதரவு
“அதே போல ஸ்மித் ஓப்பனிங் இடத்திலிருந்து மீண்டும் 4வது இடத்திற்கு மீண்டும் விளையாட வருகிறார். எனவே அந்த இடத்தில் அவர் தனது நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். கடந்த காலங்களில் அவர் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.