இவர் சும்மா விளையாட்டா ரன்களை சரமாரிய அடிக்குறாரு – இளம்வீரரை புகழ்ந்த ரிக்கி பாண்டிங்

Ponting
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் முழு வேகத்தில் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே நியூசிலாந்து அணி இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

cup

- Advertisement -

அதன்பின்னர் தற்போது ஆஸ்திரேலிய அணியும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் குறித்தும், அணி குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்காக ஏற்கனவே பல உலக கோப்பைகளை பெற்று தந்த அனுபவம் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த ஆஸ்திரேலிய தொடரில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ள இளம் வீரரான ஜோஷ் இங்கிலீஷ் குறித்து அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

inglis

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் : ஜோஷ் இங்கிலீஷ்க்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ரன்களை விளையாட்டாக குவித்து வருகிறார். என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணியில் இருக்க வேண்டிய ஒரு நபர் தான் என்று ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து விட்டாலிட்டி பிளாஸ்ட் தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் “தி ஹண்ட்ரட்” தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நிச்சயம் இவர் வருங்காலத்தில் மிகப் பெரிய வீரராக வருவார் எனவும் பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement