ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்னுடைய ஆல் டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக அவர் சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000+ ரன்கள் அடித்துள்ள பாண்டிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
அப்படிப்பட்ட அவர் தன்னுடைய டாப் 5 பேட்ஸ்மேன்களில் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவான்களாக போற்றப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்கவில்லை. அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட்டை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் நியூஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
பாண்டிங் டாப் 5:
தங்களுடைய நாட்டின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் தன்னுடைய தேர்வில் தெரிவு செய்யவில்லை. இது பற்றி டைம்ஸ் பக்கத்தில் பாண்டிங் பேசியது பின்வருமாறு. “நான் எதிர்கொண்டு விளையாடியதிலேயே பிரைன் லாரா மிகவும் திறன் மிகுந்த பேட்ஸ்மேன். நான் கேப்டனாக இருந்த போது அவர் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு பல தூக்கமற்ற இரவுகளைக் கொடுத்தார்”
“நான் பார்த்ததிலேயே டெக்னிக்கல் அளவில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் சிறந்தவர். அதே போல ராகுல் டிராவிட். அவர்களுடன் தற்போது நான் ஜோ ரூட்டையும் போடுவேன். கடந்த 5 வருடங்களில் அவருடைய செயல்பாடுகள் அற்புதமானதாக இருக்கிறது. தற்போது அவர் 13500 ரன்களை அடித்துள்ளார். நீங்கள் 30 – 40 போட்டிகளில் சிறந்தவராக இருக்க முடியும். ஆனால் 150 போட்டிகளில் இருக்க முடியுமா?
தரமான ஸ்டோக்ஸ், காலிஸ்:
“ஜோ ரூட் தனது முதல் 100 போட்டிகளில் சிறந்தவர் கிடையாது. ஆனால் அதன் பின் சிறந்த வீரராக மாறிய அவர் கடந்த 60 போட்டிகளில் 21 சதங்கள் அடித்துள்ளார். அவருடன் கேன் வில்லியம்சனும் இருப்பார்” என்று கூறினார். மேலும் ஜேக் கேலிஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல் ரவுண்டர்கள் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறமையுடையவர்கள் என்றும் பாண்டிங் பாராட்டினார். இது பற்றி பாண்டிங் மேற்கொண்டு பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஐபிஎல், பும்ராவை யாரும் நினைக்க மாட்டாங்க.. இந்திய வீரர்களை யாரும் மறக்க மாட்டாங்க.. வெங்சர்கார் பாராட்டு
“பென் ஸ்டோக்ஸ் கடினமானவர். புள்ளி விவரங்களால் அவரை மதிப்பிட முடியாது. அவர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அசத்தக்கூடிய வீரர். சூழ்நிலைகள் கடினமாகும் போது அவர் தனது சிறந்த செயல்பாடுகளைக் கொடுப்பார். நீங்கள் சிறந்த வீரர்களைப் பற்றி பேசும் போது விளையாட்டில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் பேச வேண்டும். அந்த வகையில் ஜேக் காலிஸ் நான் பார்த்த கிரேட்டஸ்ட் கிரிக்கெட்டர்களில் ஒருவர்” என்று கூறினார்.



