
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் பும்ரா தலைமையில் இந்தியா வெற்றி கண்டது. இதை அடுத்து ரோகித் சர்மா தலைமையில் அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியில் விளையாடாத ரோகித்துக்கு பதில் வாய்ப்பு பெற்ற ராகுல் 77 ரன்களை குவித்து ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனால் அந்த ஜோடியை பிரிக்க விரும்பாத ரோகித் தம்முடைய ஓப்பனிங் இடத்தை ராகுலுக்கு கொடுத்து இரண்டாவது போட்டியில் 6வது இடத்தில் களமிறங்கினார்.
ஆனால் அந்த வாய்ப்பில் 3 ரன்னில் அவுட்டாகி அவர் ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் அது பற்றி சுனில் கவாஸ்கர் விளக்கியது பின்வருமாறு. “முந்தைய போட்டியில் ஜெய்ஸ்வால் – ராகுல் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். எனவே நீங்கள் அந்த வேகத்தை உடைக்க விரும்ப மாட்டீர்கள். அது போக ரோகித் நவம்பர் 3க்குப்பின் பெரியளவில் எந்த கிரிக்கெட்டையும் விளையாடவில்லை”
“இப்போது நாம் டிசம்பர் 3இல் இருக்கிறோம். இளஞ்சிவப்பு நிற பந்தை எதிர்கொள்வது எளிதல்ல. இந்தியா கடந்த 2 – 3 வருடங்களாக அந்தப் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடும் இந்த முடிவு சரியானது” என்று கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து ரிக்கி பாண்டிங் பேசியது பின்வருமாறு.
“கவாஸ்கர் சொன்னதை நான் மறுக்கிறேன். ரோஹித் சர்மா துவக்க வீரராக விளையாடியிருக்க வேண்டும். ராகுல் பல வருடங்களாக பல்வேறு இடங்களில் விளையாடி வருகிறார். ஆம் அவர் முதல் போட்டியில் நன்றாக விளையாடினார். தற்போது ராகுல் இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் கொஞ்சம் நன்றாக விளையாடினார். கில் நன்றாக விளையாடியது போல் தெரிகின்றது”
இதையும் படிங்க: அந்த பாகிஸ்தான் ஜாம்பவானுக்கு அப்றம்.. ஆஸி பயப்படும் ஒரே பவுலர் பும்ரா மட்டுமே.. பசித் அலி பாராட்டு
“அதனால் தற்போது ரோகித் சர்மா தன்னுடைய எஞ்சிய கேரியரை 6வது இடத்தில் மட்டுமே மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய நிலைமையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித்தின் புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லை என்றாலும் அவர் கிளாஸ் பிளேயர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ஒரு சதத்தை மட்டுமே எடுத்துள்ளார். இருப்பினும் கேப்டனான அவர் இத்தொடரில் வந்து மிடில் ஆடரில் விளையாடுவது கண்ணைத் திறக்க வேண்டிய விஷயமாகும். கேப்டனான அவர் தான் இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.