சிஎஸ்கே’வை சாய்க்க வெறியுடன் காத்திருக்கும் இந்திய வீரரை இறக்கும் டெல்லி? ரிக்கி பாண்டிங் சூசகம்

Ricky Ponting
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக தோனிக்கு பின் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் விளையாடும் சென்னை இளம் வீரர்களுடன் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து அசத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னை தங்களுடைய 3வது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக தலைமை தாங்கும் டெல்லி அணி இதுவரை சுமாராக விளையாடி 2 போட்டிகளிலும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே சென்னைக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டெல்லி களமிறங்க உள்ளது.

- Advertisement -

பாண்டிங் சூசகம்:
இந்நிலையில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாத இளம் டெல்லி வீரர் பிரிதிவி ஷா சென்னைக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட பிரிதிவி ஷா கடந்த ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடினார். அதனால் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக வெறியுடன் காத்திருக்கும் அவரை இந்த போட்டியில் களமிறக்க வைப்பது பற்றி ரிக்கி பாண்டிங் பேசியது பின்வருமாறு.

“ஆம் பிரிதிவி அணிக்குள் வருவதற்காக தன்னை தள்ளிக் கொண்டிருக்கிறார். கடந்த சில வாரங்களாக அவர் அதற்காக கடினமாக உழைத்துள்ளார். கடந்த போட்டியில் நோர்ட்ஜெ இல்லாததால் நாங்கள் 4 வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுடன் விளையாடினோம். அதன் காரணமாக நாங்கள் மிட்சேல் மார்ஷை டாப் ஆர்டரில் விளையாட வைத்தோம். அதனாலயே பிரித்திவி ஷா தேர்வு செய்யப்படவில்லை”

- Advertisement -

“எனவே வலைப்பயிற்சியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை நாங்கள் பார்க்க உள்ளோம். ஒருவேளை அனைவரையும் கவரும் பட்சத்தில் கண்டிப்பாக அவரை இப்போட்டிக்கான தேர்வில் நாங்கள் எடுப்போம். கடந்த போட்டிகளில் எந்தளவுக்கு நல்ல மற்றும் மோசமான கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதை பற்றி நாங்கள் 2 முறை அணி மீட்டிங்கில் பேசினோம். எனவே 40 ஓவர்களும் நல்ல கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவதற்கான வழியை நாங்கள் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: கே.எல் ராகுல் ஏன் கேப்டன்சி செய்யவில்லை.. தற்காலிக கேப்டன் நிக்கோலஸ் பூரான் அளித்த பேட்டி

“முதல் 2 போட்டிகளில் நாங்கள் எளிதாக வென்றிருப்போம். முதல் போட்டியில் நன்றாக வீசிய இசாந்த் சர்மாவுக்கு உதவி கிடைக்கவில்லை. மற்றொரு போட்டியில் பந்து வீச்சில் நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கினோம். இருப்பினும் சிஎஸ்கே போன்ற நல்ல அணிக்கு எதிராக அனைத்தையும் திருப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அதற்கு 40 ஓவர்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவது மட்டுமே முக்கியம்” என்று கூறினார்.

Advertisement