கே.எல் ராகுல் ஏன் கேப்டன்சி செய்யவில்லை.. தற்காலிக கேப்டன் நிக்கோலஸ் பூரான் அளித்த பேட்டி

Pooran
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக டி காக் 54 ரன்களையும், க்ருனால் பாண்டியா 43 ரன்களையும், நிக்கோலாஸ் பூரான் 42 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே குவிக்க 22 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

நேற்றைய இந்த போட்டியின் போது லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுலுக்கு பதிலாக அதிரடி வீரர் பூரான் கேப்டனாக செயல்பட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது, மேலும் கே.எல் ராகுல் ஏன் கேப்டன்சி செய்யவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது.

- Advertisement -

அதற்கு பதில் அளிக்கும் வகையில் நிக்கோலஸ் பூரான் கூறுகையில் : கே.எல் ராகுல் அண்மையில் காயத்தை சந்தித்து அணிக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி இது ஒரு நீண்ட தொடர் என்பதினால் அவருக்கு ஓய்வளிக்க விரும்புகிறோம்.

இதையும் படிங்க : நான் ஒரு பிளான் போட்டேன்.. ஆனா மயங் வேறொரு பிளான் போட்டு ஆச்சர்யப்படுத்திட்டாரு.. தவான் வருத்தம்

அந்த வகையில் தான் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் இம்பேக்ட் பிளேயராக விளையாடுகிறார் என்றும் அனைவருக்கும் சரியான வாய்ப்புகளை அளிப்போம் என்றும் பூரான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement